Wednesday, March 16, 2016

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்



மாணவன்:

சாங்கிய மதத்தின் ஒரு பிரிவினர் 'உலகத்திற்கு முதல் காரணம் "பிரகிருதி"', அது தன்னைத்தானே தோற்றுவிக்கும் என்று கூறுகின்றனரே, அஃது எவ்வாறு?

ஆசிரியர்:

அறிவில்லாத பொருள் தானே செயல்படுவது இல்லை. எனவே உலகம்  செய்படுகிறது எனில் , அஃது அறிவு பெற்ற ஒரு கர்த்தாவினால் தான் நிகழ்த்தப்படுகிறது. எனவே அதை நடத்துபவன் பேரறிவும் பேராற்றலும் பெற்றவனாகவே இருக்க முடியும்.

மாணவன்:

அறிவு அற்றவைகளுக்கு செயல்பாடுகள் இல்லை எனில் எவ்வாறு காந்தம் இரும்பை ஈர்க்கிறது. நஞ்சு பற்றி இடம் இல்லாமல் எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.

ஆசிரியர்:

காந்தத்தையும், இருப்பையும் ஒருவன் கூட்டுவிக்கும் போதே அது ஈர்க்கப்படும். நஞ்சு பரவுதல் உயிர் உள்ள உடம்பின். எனவே அறிவில்லாத பொருள்கள் செயல்படா.

மாணவன்:

நீங்கள் குறிப்பிட்டது போல் உயிர்கள் அறிவுடைப் பொருள் எனில் அவைகள் உலகிற்கு கர்த்தாவாகுதல் என்பது சரியா?


ஆசிரியர்:

நிச்சயம் இல்லை. உயிர்கள் உடம்பை பெற்றபின்னரே முழுமை பெறும் தன்னை உடையதாகும். உடம்பு இல்லா உயிர்கள் மற்றொரு உடம்பை தோற்றுவிக்காது. எனவே பேரறிவு உடைய இறைவனே உலகிற்கு கர்த்தா.



No comments:

Post a Comment