Thursday, December 31, 2015

சைவத் திருத்தலங்கள் 274 – திருவோத்தூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருவோத்தூர்

சதுர ஆவுடையார்
இறைவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின் ஓத்தூர் - 'திரு' அடைமொழி சேர்ந்து 'திருஓத்தூர் ' – திருவோத்தூர்
சிவபெருமான் வீரநடனம் புரிந்த தலம்
ரத ஸப்தமி அன்று சூரிய ஒளி சுவாமி மீது விழும்.
முருகப் பெருமான் இறைவனை பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்று
திருஞானசம்பந்தர் பதிகம் பாடி, ஆண்பனை, பெண்பனையான தலம்
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை கற்றுத்தரும் போது அவர்கள் தவிர வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருப்பதாக வரலாறு

தொண்டைமான் விசுவாவசு என்னும் மன்னனிடம் தோற்ற பொழுது அவன் வெற்றிபெறுவதற்காக நந்தியை படைத் துணையாக அனுப்பிய இடம். இதன் பொருட்டு நந்தி முன் கோபுரம் நோக்கியவாறு.



தலம்
திருவோத்தூர்
பிற பெயர்கள்
செய்யாறு, திருவத்திபுரம், திருவத்தூர்
இறைவன்
வேதபுரீஸ்வரர், வேதநாதர்
இறைவி
பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி
தல விருட்சம்
பனை
தீர்த்தம்
ஆலயத்திற்கு வெளியே சேயாறு, வெளிப் பிராகாரத்தில் கல்யாணகோடி தீர்த்தம், மானச தீர்த்தம்,
விழாக்கள்
தை மாதம்பிரம்மோற்சவம், ஆடி மாதம் - லட்ச தீபம், ஆடி விசாகம் - ஞானசம்பந்தர் விழா, சுந்தரர் மோட்சம் சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரம்,
மாசி மகம், அப்பாத்துரை தோப்பு திருவிழா பிரதோஷம்
மாவட்டம்
திருவண்ணாமலை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரை

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவத்திபுரம்

செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN - 604407
04182 – 224387
வழிபட்டவர்கள்
தொண்டைமான்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் - 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 250 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   8 வது தலம்.


வேதபுரீஸ்வரர்



இளமுலைநாயகி



பாடியவர்            திருஞானசம்பந்தர்        
திருமுறை           1         
பதிக எண்           54       
திருமுறை எண்      8        

பாடல்

என்றா னிம்மலை யென்ற வரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே.

பொருள்

கயிலை மலை குறித்து குறைவாக மதிப்பிட்டு செறுக்கு கொண்ட இராவணனை தனது கால் பெருவிரலால் வென்றவரும், தனது மனதில் இருந்து மாறுபட்டவர்களான மூன்று கோட்டைகள் கொண்ட மூன்று  அசுரர்களை திரிபுர தகனம் அழித்தவரும் ஆகிய ஈசன் உறையும் தலமாகிய திருவோத்தும் எனும் ஊர்ப் பெயரைச் சொன்ன அளவில் அவர்களிடத்து இருக்கும் வினைகள் நீங்கும்.

கருத்து

என்தான் - எம்மாத்திரம். ஒன்னார் - பகைவர்


பாடியவர்            திருஞானசம்பந்தர்        
திருமுறை           1         
பதிக எண்           54       
திருமுறை எண்      9        

பாடல்

நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரேயுமை நேடியே.

பொருள்

திருவோத்தூரில் விளங்கும் இறைவரே!  நான்கு வேதங்களை அதன் பொருள் உணர்ந்து ஓதுபவனாகிய பிரமன், திருமால் ஆகியோர் நீ ஏக உருவில் தீப்பிழம்பாய் இருத்தலை கண்டு அறியாமையினால் திசைகள் எல்லாம் தேடி அலைந்தனர். அவர்களது அறிவுநிலை யாது?

கருத்து
நன்றாம் நான் மறையான் - நல்லன செய்யும் நான்மறைகளை ஓதியும்


Reference

தவர்வாள் தோமர சூலம் காதிய சூருந் - எனத் தொடங்கும் திருப்புகழ்

' உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதிதயம்  ' எனத் தொடங்கும் திருஅருட்பிரக்காச வள்ளளாரின் ஐந்தாம் திருமுறை

புகைப்படம் : தினமலர்

இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.

No comments:

Post a Comment